Friday, October 2, 2015

CAR WASHING & SERVICE சர்வீசிங் சென்டர் பிசினஸ்

கார் சர்வீஸ் பிசினஸ் :
இரண்டு சக்கர வாகனத்துக்கு இணையாக கார்களின் தேவை இன்று அதிகரித்துள்ளது. கார் வாங்குவதற்கு எளிதாகக் கடன் கிடைப்பது இதற்கு ஒரு முக்கியமான காரணம் ஆகும். அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் கார்களின் எண்ணிக்கை 40 - 45 கோடியாக உயர வாய்ப்புள்ளது. தற்போது 7 கோடி கார்கள் உள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் உலகின் 5-வது மிகப் பெரிய கன்ஸ்யூமர் நாடாக இந்தியா மாறும். வேகமாக வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே, கார் பராமரிப்பு என்பது அவசியமான ஒன்றாக மாறி உள்ளது.ஒரேநேரத்தில் அதிகபட்சமாக ஐந்து கார்களை வாஷ் செய்யவும், மூன்று கார்களை பார்க் செய்யும் அளவுக்குக் கட்டாயம் இடம் தேவை. மேலும், இந்தத் தொழிலில் தொடர் செலவுகள் என்பது கிடையாது. அதாவது, பணியாளர்களின் சம்பளம் மற்றும் வாஷிங் செய்வதற்கு தேவையான பொருட்களைத் தவிர்த்து வேறு செலவு கிடையாது.மழைக் காலத்தில் மட்டும் கார்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. அதிக லாபம் தரக்கூடிய தொழில் இது.  வாடிக்கையாளரின் தேவை என்ன என்பதைத் தெரிந்து சேவைசெய்வது முக்கியம்

தேவையான இயந்திரம்: பிரஷ், ஜெட் ஸ்பிரே, உலர்த்தும் இயந்திரம், சென்சர், கன்ட்ரோலர், பம்ப், டைர்வ்ஸ், நாசில் போன்றவை.
தொழில் வாய்ப்பு: வளர்ச்சி அடையும் அனைத்துப் பகுதிகளும்.
வரிக்குப் பின் வருமானம்:  30% கிடைக்கும்.

தேவைப்படும் முதலீடுகள் பற்றிய விவரம் :
தொழில் துவங்க தேவைப்படும் மொத்த முதலீடு :22லட்சம் 
இயந்திரங்கள் வாங்கும் செலவு : 15லட்சம் 
தொழில் துவங்கும் முன்னே செலவுகள் :1 லட்சம் 
செயல்பாட்டு மூலதனம் : 1லட்சம் 
தொழில் நடக்கும் இடம் கட்டிடம் வாடகை :5லட்சம் , மேலும் 1000 சதுரடி இடம் தேவை 

இதற்க்கு நிதி ஆதாரம் கிடைக்குமா ?
கிடைக்கும் மானியம் : 3.75 லட்சம் 
நாம் போடும் மூலதனம் : 7.75லட்சம் 
வங்கி கடன் : 10.50லட்சம்.
என்இஇடி(New Entrepreneurship Cum Enterprise  Development Scheme (NEEDS)  என்ற திட்டத்தின் கீழ் இயந்திரம் வாங்கும் மதிப்பில் 25% மானியம் கிடைக்கும்.
நன்றி : நாணயம் விகடன் 

பயோமாஸ் என்னும் எரிபொருள் தயாரிப்பு பிசினஸ் ஸ்தாபிக்க வழிமுறைகள்

பயோமாஸ் என்னும் எரிபொருள் தயாரிப்பு தொழில்  
தொழில் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால், இந்த பயோமாஸ் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது. முக்கியமாக டீ, புகையிலை, லெதர், டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சாலைகளில் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. மேலும், நிலக்கரியின் விலை அதிகம் என்பதால், பாய்லர் உள்ள தொழிற்சாலைகள் அனைத்திலும் இதன் பயன்பாடு அதிகம். அதோடு அதிலிருந்து கிடைக்கும் வெப்பமும் குறைவானதாகவே இருக்கும். இதனால் இந்தக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் எரிபொருளுக்கு அதிக வரவேற்பு உள்ளது.
  • தேவையான இயந்திரம்: கழிவுகளை அரைக்கும் இயந்திரம், ஜெனரேட்டர் அவசியம் தேவை.
  • தொழில் வாய்ப்பு: தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இடம். டீ தயாரிப்பு தொழிற்சாலை உள்ள ஊட்டியில் அதிக வரவேற்பு உள்ள தொழில் இது. இதில் மட்டும் வருடத்துக்கு 50 ஆயிரம் டன் கழிவு தேவைப்படுகிறது.
  • வரிக்குப் பின் வருமானம்:  10% கிடைக்கும்.
தேவைப்படும் முதலீடுகள் பற்றிய விவரம் :

தொழில் துவங்க தேவைப்படும் மொத்த முதலீடு :34லட்சம் 
இயந்திரங்கள் வாங்கும் செலவு : 20 லட்சம் 
தொழில் துவங்கும் முன்னே செலவுகள் :1 லட்சம் 
செயல்பாட்டு மூலதனம் : 5 லட்சம் 
தொழில் நடக்கும் இடம் கட்டிடம் வாடகை :8லட்சம் , மேலும் 4000 சதுரடி இடம் தேவை 

இதற்க்கு நிதி ஆதாரம் கிடைக்குமா ?

கிடைக்கும் மானியம் : 5 லட்சம் 
நாம் போடும் மூலதனம் : 15 லட்சம் 
வங்கி கடன் : 14 லட்சம்.

நமக்கு தேவையான பணம் இவைகளால் நாம் சேகரித்து கொள்ள இயலும் ,பயோமாஸ் எரிபொருளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. காற்று மாசுபடாத வகையில் எரிபொருள் பயன்படுத்தினால்தான் தொழில் நிறுவனங்களுக்கு லைசென்ஸ் கிடைக்கும். இதனால் இதன் தேவை எப்போதும் குறையாது. வீணாகும் பொருளிலிருந்து இன்னொரு பொருளை தயாரிக்கும்போது 5% வரி கட்ட வேண்டும். இது ஒன்றுதான் இதில் உள்ள ஒரு நெகட்டிவ் அம்சம். 
தொடர்ந்து நிறுவனங்களுடன் பேசி தரமான எரிபொருளை வழங்குவதே தொழில்வெற்றிக்குமுக்கியமானது.என்இஇடி(NewEntrepreneurshipCum Enterprise Development Scheme (NEEDS) என்ற திட்டத்தின் கீழ் இயந்திரம் வாங்கும் மதிப்பில் 25% மானியம் கிடைக்கும்.

நன்றி நாணயம் விகடன் 

லாண்டரி சர்வீஸ் என்னும் சலவை தொழிலை துவங்குவது எப்படி ?

Laundry Service : சலவை பிசினஸ் 
தேவைப்படும் முதலீடுகள் பற்றிய விவரம் :
தொழில் துவங்க தேவைப்படும் மொத்த முதலீடு :19 லட்சம் 
இயந்திரங்கள் வாங்கும் செலவு : 15 லட்சம் 
தொழில் துவங்கும் முன்னே செலவுகள் :1 லட்சம் 
செயல்பாட்டு மூலதனம் : 1 லட்சம் 

தொழில் நடக்கும் இடம் கட்டிடம் வாடகை :2 லட்சம் 


லாண்டரி சர்வீஸ் என்பது இன்றைய வேகமான வாழ்க்கை முறைக்கு அவசியமானதாக மாறி உள்ளது. 2017-ம் ஆண்டுக்குள் லாண்டரி சேவை 65 சதவிகிதம் வளர்ச்சி அடையும் என சி அண்டு டபிள்யூ (Cushman & Wakefield) ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும், புதிதாக 52 ஆயிரம் ஹோட்டல்கள் துவக்கப்படும் எனவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது. மேற்கூறிய துறைகள் வேகமாக வளர்ச்சி அடையும்போது லாண்டரி சேவையின் தேவையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.புதிதாக வேலைக்குப் போகும் இளைஞர்களின் வளர்ச்சி அதிகரித்து வருவதாலும் இந்த லாண்டரி சேவைக்கு அதிக வரவேற்பு உள்ளது. அதாவது, அவர்களின் துணிகளைத் துவைத்து அயன் செய்து தருவதற்கான கட்டணம் என்பது மிகவும் குறைவு. இந்த தொழிலுக்கு தண்ணீர் அதிகம் தேவை.
  • தேவையான இயந்திரங்கள்: தொழில் துறைக்குத் தேவையான வாஷிங் மெஷின், ஹைட்ரோ கரைப்பன், துணிகளை உலர்த்தும் இயந்திரம், அயன் செய்யும் டேபிள் மற்றும் அதற்கான இயந்திரம்.
  • தேவையான ஆட்கள்: அதிகபட்சம் 40 நபர்கள்.
  • தொழில் வாய்ப்புகள்: மருத்துவமனை, ஹோட்டல், வேலைக்குப் போகும் தனிநபர்கள், கல்வி நிறுவனங்கள், ரயில்வே, பேருந்துகள் போன்றவை.
  • வரிக்குப் பின் வருமானம்:  16% கிடைக்கும்.
இதற்க்கு நிதி ஆதாரம் கிடைக்குமா ?
  • கிடைக்கும் மானியம் : 3.75 லட்சம் 
  • நாம் போடும் மூலதனம் : 5.25 லட்சம் 
  • வங்கி கடன் : 10 லட்சம்.
நமக்கு தேவையான பணம் இவைகளால் நாம் சேகரித்து கொள்ள இயலும் இதில் 20-25 சதவிகிதம் வரை லாபம் கிடைக்கும்.
நன்றி : நாணயம் விகடன்

ரெடிமேட் Food பிசினஸ் துவங்குவது எப்படி ?

Ready to eat Food business : ரெடிமேட்  புட்  பிசினஸ் 
உலக அளவில் ரெடி டு ஈட் ஃபுட்டுக்கான வரவேற்பு அதிகம் உள்ளது. மாறி வரும் வாழ்க்கை முறையின் காரணமாக இதன் தேவை அதிகரித்துள்ளது. இப்போது பல குடும்பங்களில் கணவனும் மனைவியும் வேலைக்குப் போகிறார்கள். மேலும், பலரது சம்பளமும் இப்போது குறிப்பிடத்தகுந்த அளவு உயர்ந்திருப்பதால், செலவு செய்யவும் தயாராக இருக்கிறார்கள். தவிர, வேலை காரணமாக சொந்த ஊரைவிட்டு, வெளியூருக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதால், இந்த ரெடி டு ஈட் ஃபுட்டுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களின் எண்ணிக்கை கூடுவதால் ஏற்றுமதிக்கும் உகந்த பொருளாக உள்ளது.

  • சந்தை மதிப்பு: ரூ. 4,000 கோடி, இத்துறை வருடத்துக்கு 21.99% வளர்ச்சி அடைகிறது.  இந்தத் தொழில் துவங்குவதற்கு  FSSAI லைசென்ஸ் வாங்க வேண்டும்.
  • தேவையான இயந்திரங்கள்: இயந்திரம், சப்பாத்தி செய்யும் இயந்திரம், டபுள் ஸ்பைரல் மிக்ஸர், பிரையிங் மெஷின் ஆகியவை தேவை.
  • தேவையான ஆட்கள்: 2 நபர்கள்.
  • தொழில் வாய்ப்புகள்: சென்னை, கோவை மற்றும் வளர்ச்சி அடையும் மாவட்டங்கள்.
  • வரிக்குப் பிந்தைய வருமானம்:  30 சதவிகிதம் 
உணவுப் பொருட்களைவிட ஸ்நாக்ஸ் வகைகளுக்குச் சந்தையில் அதிக வரவேற்பு உள்ளது. தரமாகவும், விலை குறைவாகவும் உணவுகளை வழங்கினால், மாதத்துக்கு 70-90 ஆயிரம் ரூபாய் வரை லாபம் பார்க்க முடியும். இதை துவங்க தேவைப்படும் மொத்தம் 9 லட்சம் முதலீடு வேண்டும் ,5 லட்சம் ஆகும் இரண்டு வகையான மெஷின் வாங்க ,இது போக மீதி 4 லட்சம் இடம் ,செயல்பாட்டு மூலதனம் ,துவக்க செலவு என்று அவசியம் .

இதற்க்கு ஏதேனும் உதவி கிடைக்குமா நிதி ஆதாரமாய் ?
வாய்ப்புண்டு ,நீங்க ஸ்தாபிக்கும் மூலதனம் 4.5 லட்சம் கையிருப்பு போடுங்க ,இதற்கான மானியம் ஒரு 1.25 லட்சம் கிட்டும் ,வங்கி கடன் கூட கிடைக்கும் முயன்றால், அது ஒரு 3.50 லட்சம் வாங்கினால் ,மொத்தம் உங்களின் இருப்புத்தொகை 9 லட்சம் ஆக மாறும் நீங்கள் தொழில் துவங்க உதவும் . 

நன்றி : நாணயம் விகடன் 

Thursday, September 24, 2015

USB டாங்கிள் DATACARD connect ஆகாமல் மக்கர் செய்கிறதா ? இணையதளத்தை பயன்படுத்த இயலாமல் தடுமாற்றமா ?

கணினியில் பயன்படுத்தக்கூடிய யூ எஸ் பி டாங்கிள் ( dongle ) /data card deviceகளில் பெரும்பாலும் டெலிகாம் கம்பெனி வழங்கும் device  கொஞ்சம் பாதுகாப்பானது .ஆனால் நாமே சிம் பொருத்தி பயன்படுத்தும் manual டிவைஸ் சில நேரம் connect ஆகாமல் இருக்கும் . அதற்க்கு என்ன செய்யலாம் !!!
  • உங்களின் கணினியில் போர்ட் மாற்றுங்கள் அதாவது நீங்கள் பெண்டிரைவ் இன்சர்ட் செய்யும் பின்னில் இதை போடாமல் அருகில் இருக்கும் வேறு பின்னில் சொருகி மீண்டும் உங்கள் நெட் ஐ கனெக்ட் செய்து பாருங்கள் .
  • உங்களின் கணினியில் தேவையற்ற temporary files அதிகம் store ஆகி இருந்தாலும் இது போல பிரச்சனை வரும் அதற்க்கு உங்கள் கம்ப்யூட்டர் இல் Run option கிளிக் செய்து அதில் %temp% type பண்ணி , open செய்து ஸ்க்ரீனில் வரும் தேவையற்ற files ஐ delete செய்யுங்கள் . மீண்டும் நெட் connect செய்து பாருங்கள்
  • உங்களின் connect dailogbox  இல் போர்ட் காண்பிக்காமல் error என்று காட்டுகிறதா ?நீங்கள் சிம் போட்டு யூ எஸ் பி பயன்படுத்துபவர் என்றால் அதை கழட்டி மீண்டும் சரியாய் போட்டு பயன்படுத்தி பாருங்கள்
  • நீங்கள் சிஸ்டம் இல் அதிகமான  பழைய software நிறைத்து வைத்திருந்தால் சில நேரம் நெட் connect செய்ய இல்லாமல் ஹேங் ஆகும் எனவே அதை சீர் செய்துவிட்டு மீண்டும் முயற்ச்சியுங்க
  • சில நேரம்  யூ எஸ் பி இன்ஸ்டால் செய்தது சரியாய் இருக்காது எனவே சரியாய் மீண்டும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி பாருங்க
  • உங்களின் யூ எஸ் பி சாப்ட்வேர் ஒருவேளை lastest updation ஆகாமல் இருந்தால் அதை கம்பெனி வலைப்பக்கத்தில் இருந்து புதிதாய் உங்க device க்கு பொருந்துவதை தரவிரக்கம் செய்து பயன்படுத்தி பாருங்க
  • நீங்கள் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்தும் connect ஆகவில்லை என்றால் கம்ப்யூட்டர் ஐ shutdown செய்து திரும்பவும் restart செய்து முயற்சிக்கவும்
  • நெட்வொர்க் சிக்னல் சரியாய் இருக்கிறதா என்று சரி பார்த்து கொள்ளுங்கள்
  • மேலும் பிரச்சனை தொடர்ந்தால் வேறு ஒரு கணினியில் உங்கள் device இயங்குதா என்று செக் செய்க
  • சில நேரம் யூ எஸ் பி பின் பழுதாகி இருந்தாலும் இது போல பிரச்சனைகள் ஆகும்
  • சில நேரம் நெட்வொர்க் error ஆகவும் இருக்கும் ஏதேனும் நெட்வொர்க் இல் பழுது ஏற்பட்டிருந்தால் இது போன்ற பிரச்சனை வரும் ,நீங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு இது பற்றி தெரிவிதால் அவர்கள் இதை சரி செய்து விடுவார்கள் .
  • எப்போதும் நெட்வொர்க் சிக்னல் நன்றாய் கிடைக்கும் டாங்கிள் / datacard பயன்படுத்துங்க , மேலும் slow நெட் ஸ்பீட் இருந்தால் பல நேரம் operator மட்டும் அல்ல நமது கணினியே கூட அதிகமான மென்பொருள் அழுத்தம் காரணமாய் இப்படி செய்ய கூடும் அடிக்கடி சரி பார்த்து கொள்ளுங்கள் .


Wednesday, August 26, 2015

ஒசாமா பின்லேடன் பற்றி வியப்பான விஷயங்கள்

ஒசாமா பின்லேடன் குறித்து நீங்கள் அறிந்திராத சுவாரஸியமான விஷயங்கள் 
ஒசாமா பின்லேடன் என்றால் அவர் இரட்டை கோபுரத்தை தகர்த்த தீவீரவாத தாக்குதல் தான் நமது நினைவிற்கு வரும் . இவர் பற்றி நிறைய ஆச்சரியமான விஷயங்கள் உண்டு

ஒசாமா ஒரு பணக்கார அரேபிய  குடும்பத்தை சார்ந்தவர் ஆயினும் அவர் போராளி என்பதை சொல்லிகொள்ளவே விரும்பி இருக்கிறார்

அவர் அமெரிக்க தேசத்தை வெறுத்ததை விடவும் இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றாத இஸ்லாமியர்களை தான் அதிகம் வெறுத்தாராம்

இவர் ஒரு வாலிபால் பிளேயர் , இவர் நிறைய விளையாட்டுகளிலும் பங்கெடுத்து இருந்திருக்கிறார் அமெரிக்காவை பற்றி அங்குள்ள விளையாட்டான volley ball தவிர மற்ற எல்லாத்தையும் வெறுத்து இருக்கிறார்

ஒசாமாவிற்கு மஹாத்மா காந்தியின் கொள்கைகள் பிடிக்குமாம் , அவர் இது குறித்து ஒரு கேசெட்டில் பேசியும் இருக்கிறார் எப்படி காந்தி அவர்கள் பிரிட்டிஷ் பொருட்களை நிராகரித்தாரோ அதை போல அவர்களும் அமெரிக்க பொருட்களை நிராகரிக்க வேண்டும் என்று

ஒசாமாவிற்கு பிரிட்டிஷின் நியூஸ் பிபிசி கேட்பது மிகவும் பிடிக்குமாம் அடிக்கடி ரேடியோ நியூஸ் கேட்பாராம்

இவர் படித்தது Business Administration and Economics மேலும் இவரின் தகப்பனாரின் வியாபாரமான construction businessஐ நடத்தியும் வந்திருக்கிறார்

இவருக்கு தோட்ட கலைகளில் ஆர்வம் மிகுதி தனது பிள்ளைகளை செடிகள் வளர்க்க ஊக்குவிப்பாராம் எவரின் செடி உயரமும் நன்றாகவும் உள்ளதோ அவருக்கு பரிசளிப்பாராம்

இவர் நன்றாய் கவிதை எழுத கூடியவரும் இலக்கிய அறிவு உடையவராய் இருந்திருக்கிறார் மேலும் இவரின் கவிதைகள் political சிந்தை உடையனவாம் .



Tuesday, August 25, 2015

பில்கேட்ஸ் பற்றி நீங்கள் அறிந்திறாத தகவல்கள்

உலகத்தில் பிரமலமான பணக்காரர் என்றால் நாம் பில்கேட்ஸ் என்போம் இவரை பற்றி நாம் அறியாத சில விஷயங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள் 
  • வாஷிங்க்டன் ஸீட்டில் இல் பில்கேட்ஸ்  Oct. 28, 1955 அன்று பெற்றோரில் ஒருவர்  வழக்கறிஞர் ஆகவும் இன்னொருவோர் ஆசிரியர் ஆகவும் இருந்த தம்பதிக்கு பிறந்தார் .இவர் ஒரு நன்றாய் வழக்காடும் சிறுவனாகவும் அறிவுள்ள பிள்ளையாகவும் இருந்தாராம் ,மேலும் இவர் அதிகமாய் அறிவை பெருக்கி கொள்ளும் வாஞ்சை உடையவராய் இருந்தாராம் . தனது இளம் பிராயத்தில் உலக என்சய்களோ பீடியாவின் பாகங்கள் முதலில் இருந்து கடைசி வரையிலும் அத்தனை பாகங்களையும் படித்து முடித்து விட்டாராம்  , புத்தகங்கள் படிப்பது இவருக்கு பிரியம் இப்போதும் இவர் வீட்டில் ஒரு பெரிய புத்தக லைப்ரரி உண்டு .
  • இவர் ஹர்ட்வர்ட் பல்கலைகழகத்தில் இருந்து பாதியில் படிப்பை முடித்திராமல் வெளியேறினார் இருப்பினும் அதே பல்கலைக்கழகம் 2007 இல்  இவருக்கு உயர்ந்த மரியாதைக்கு உரிய டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. மேலும் இவர் பட்டம் அழைப்பு விழாவிற்க்கு அங்கே சிறப்பு விருந்தினராய் அழைக்கபட்டு இருந்தார் அப்போது அவர் கூறியது " நான் ஒரு தவறான உதாரணம் அதுதான் பட்டம் அழைப்பு விழாவிற்கு அழைக்க பட்டு இருக்கிறேன் ஒருவேளை நான் கல்லூரி படிப்பின் ஆரம்ப விழாவிற்க்கு அழைக்கபட்டு  இருந்தால் அப்போது நான் பேசி இருந்தால் இங்கே பட்டம் வாங்க மிக குறைவானவர்களே இருந்திருப்பீர்கள் " என்று கூறினாராம் .
  • எத்தனையோ எதிர்ப்புகள் சோர்வுகள் போரட்டங்கள் இத்தனையையும் தாண்டி 1985 இல் mircosoft வெளியிட பட்டது 1986 இல் சந்தைக்கு வந்தது 1987 இல் 31 வயதான இவர் பணக்காரரும்  பில்லியனர்ரும்  ஆனார் 
  • சிறு வயதில் ஒருமுறை லைசென்ஸ் இன்றி கார் ஒட்டி ,தப்பி ஓட முயன்றதற்க்காய் கைது செய்யப்பட்டு இருக்கிறார் .
  • ஒருவேளை microsoft முயற்சி தோற்று இருந்தால் இவர் artificial intelligence researcher ஆகி இருப்பாராம் அதில் அவருக்கு ஆர்வம் உள்ளதாம் டென்னிஸ் விளையாடுவது அவருக்கு பிடித்தமான ஹாபி , மேலும் கார்கள் ஓட்டுவது அவருக்கு பிரியம் அவரது வீட்டில் ஏறக்குறைய 23 கார்கள் நிறுத்தும் அளவுக்கு பெரிய கரேஜ் உண்டு 

  • Warren Buffet வாரேன் பப்பெட் (இவரும் உலகின் பிரபலமான கோடிஸ்வரர் ) இவரும் பில்கேட்ஸ்ம் நல்ல நண்பர்கள் 1990's  ஆண்டுகளில் இவர் தனது மனைவியை (மெலிண்டாவை )மனம் முடிக்க ப்ரொபோஸ் செய்ய நினைத்த பொழுது வாரேன் பப்பெட் தான் அதற்கான மோதிரத்தை தேர்வு செய்து கொடுத்தாராம் . ஆரம்பத்தில் மெலிண்டா mircosoft நிறுவனத்தில் பணிபுரிந்தவர் . இவர்களுக்கு தற்பொழுது 3 பிள்ளைகள் உள்ளனர் 
  • மேலும் இவருடைய பிள்ளைகளில் ஒவ்வொருவருக்கும் 10 மில்லியன் தான் சொத்துக்கள் கொடுப்பாராம் ,ஏராளமான பில்லியன் கணக்கில் வைத்திருக்கும் இவர் அதில் ஒரு சதவிகிதம் கூட இல்லை . பில்கேட்ஸ் தனது பிள்ளைகளுக்கு நிறைய பணத்தை ஒரு தகப்பனாய் கொடுப்பது என்பது அவர்களுக்கு நன்மையானது  அல்ல என்றும் கூறி இருக்கிறார் . மேலும் தனது பிள்ளைகளுக்கு எலெக்ட்ரிக் பிளான்ட்ஸ்க்கு கூட்டி சென்று நேரில் நிறைய விஷயம் கற்றுதருவாராம் அது அவர்களுக்கும் விருப்பமாம் . 
நிறைய சம்பாதித்தாலும் நிறைய சொத்துக்கள் சேர்த்தாலும் இவர் உலகம் எங்கும் நிறைய சேவைகள் செய்து வருகிறார் , ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டம் மூலம் பலருக்கு உணவளித்து உதவிகள் செய்து வருகிறார் அவரின் foundation மூலமாய் . என்பது உண்மையில் பாராட்டவேண்டிய விஷயம் .