Friday, October 2, 2015

பயோமாஸ் என்னும் எரிபொருள் தயாரிப்பு பிசினஸ் ஸ்தாபிக்க வழிமுறைகள்

பயோமாஸ் என்னும் எரிபொருள் தயாரிப்பு தொழில்  
தொழில் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால், இந்த பயோமாஸ் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது. முக்கியமாக டீ, புகையிலை, லெதர், டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சாலைகளில் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. மேலும், நிலக்கரியின் விலை அதிகம் என்பதால், பாய்லர் உள்ள தொழிற்சாலைகள் அனைத்திலும் இதன் பயன்பாடு அதிகம். அதோடு அதிலிருந்து கிடைக்கும் வெப்பமும் குறைவானதாகவே இருக்கும். இதனால் இந்தக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் எரிபொருளுக்கு அதிக வரவேற்பு உள்ளது.
  • தேவையான இயந்திரம்: கழிவுகளை அரைக்கும் இயந்திரம், ஜெனரேட்டர் அவசியம் தேவை.
  • தொழில் வாய்ப்பு: தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இடம். டீ தயாரிப்பு தொழிற்சாலை உள்ள ஊட்டியில் அதிக வரவேற்பு உள்ள தொழில் இது. இதில் மட்டும் வருடத்துக்கு 50 ஆயிரம் டன் கழிவு தேவைப்படுகிறது.
  • வரிக்குப் பின் வருமானம்:  10% கிடைக்கும்.
தேவைப்படும் முதலீடுகள் பற்றிய விவரம் :

தொழில் துவங்க தேவைப்படும் மொத்த முதலீடு :34லட்சம் 
இயந்திரங்கள் வாங்கும் செலவு : 20 லட்சம் 
தொழில் துவங்கும் முன்னே செலவுகள் :1 லட்சம் 
செயல்பாட்டு மூலதனம் : 5 லட்சம் 
தொழில் நடக்கும் இடம் கட்டிடம் வாடகை :8லட்சம் , மேலும் 4000 சதுரடி இடம் தேவை 

இதற்க்கு நிதி ஆதாரம் கிடைக்குமா ?

கிடைக்கும் மானியம் : 5 லட்சம் 
நாம் போடும் மூலதனம் : 15 லட்சம் 
வங்கி கடன் : 14 லட்சம்.

நமக்கு தேவையான பணம் இவைகளால் நாம் சேகரித்து கொள்ள இயலும் ,பயோமாஸ் எரிபொருளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. காற்று மாசுபடாத வகையில் எரிபொருள் பயன்படுத்தினால்தான் தொழில் நிறுவனங்களுக்கு லைசென்ஸ் கிடைக்கும். இதனால் இதன் தேவை எப்போதும் குறையாது. வீணாகும் பொருளிலிருந்து இன்னொரு பொருளை தயாரிக்கும்போது 5% வரி கட்ட வேண்டும். இது ஒன்றுதான் இதில் உள்ள ஒரு நெகட்டிவ் அம்சம். 
தொடர்ந்து நிறுவனங்களுடன் பேசி தரமான எரிபொருளை வழங்குவதே தொழில்வெற்றிக்குமுக்கியமானது.என்இஇடி(NewEntrepreneurshipCum Enterprise Development Scheme (NEEDS) என்ற திட்டத்தின் கீழ் இயந்திரம் வாங்கும் மதிப்பில் 25% மானியம் கிடைக்கும்.

நன்றி நாணயம் விகடன் 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.