நம்ம சருமத்திற்கு எந்த சோப்பு தேர்வு செய்யணும் ?
‘மேனி அழகு... சருமப் பாதுகாப்புக்கு எங்கள் சோப் உத்தரவாதம்!’ இதைத்தான் வெவ்வேறு வார்த்தைகளில், வெவ்வேறு பளிச் மாடல்கள் உதவியோடு பளீரிடுகின்றன விளம்பரங்கள். பல சோப்கள்... பல விளம்பரங்கள். எதை வாங்குவது... எதைத் தவிர்ப்பது? ஏதோ ஒன்றை வாங்கிப் பயன்படுத்துவதும் தவறு. நம் சருமத்தன்மைக்கு ஒவ்வாத சோப் நிச்சயம் உடலுக்கும் சருமத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். யாரோ சொன்னார்கள் என்பதற்காக வாங்குவதைவிட, சோப் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாமா?
சோப் என்றால்?
சருமத்தில் உள்ள அழுக்கை அகற்ற ஆல்கலி, கொழுப்பு அமிலம், மினரல் அமிலம், கிளென்சிங் கெமிக்கல்ஸ் போன்றவை கலந்து சோப் தயாரிக்கப்படுகிறது. சோப் வாங்கும்போது முக்கியமாக டி.எஃப்.எம் (TFM - Total Fatty matter), பி.ஹெச் அளவு, அதில் கலந்திருக்கும் ரசாயனங்கள் மற்றும் மூலப் பொருட்களைப் பார்த்து வாங்க வேண்டும்.
- பொதுவாக சோப், டி.எஃப்.எம் அளவைப் பொறுத்து, தரம் பிரிக்கப் படுகிறது. பி.ஐ.எஸ் தர நிர்ணயத்தின்படி, மூன்று நிலை சோப்கள் இருக்கின்றன.
- கிரேடு 1: 76 சதவிகிதத்துக்கும் அதிகமாக டி.எஃப்.எம் இருக்கும். இதன் விலை சற்று அதிகம்.
- கிரேடு 2: 70 - 75 சதவிகிதம் டி.எஃப்.எம் கொண்டது.
- கிரேடு 3: 69 சதவிகிதத்துக்குக் குறைவான டி.எஃப்.எம் இருக்கும். குறைந்த விலைகளில் கிடைக்கும்.
அதிக அளவு பி.ஹெச் என்ன செய்யும்?
பி.ஹெச் அளவு என்பது ஒரு பொருளில் உள்ள ஹைட்ரஜன் சமநிலையைக் குறிப்பது. ஒரு பொருளில் உள்ள அமிலத்தன்மை (Acidic) காரத்தன்மை (Alkalic)இரண்டின் சமநிலை விகிதத்தின் குறியீடு. சருமத்தின் பி.ஹெச் அளவு 5.5.
சோப்பின் பி.ஹெச் அளவு பெரும்பாலும் 7-9 என்ற அளவில் இருக்கிறது. அதாவது, ஆல்கலின் அளவு அதிகம்.இதனால் ஈரப்பசை குறைவாகவே இருக்கும். கிருமிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தாது. கிருமித்தொற்றும் ஏற்படலாம்.இதனால் பருக்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம். சரும எரிச்சல் வரும்; சருமத்தில் வறட்சியையும் ஏற்படுத்தும்.குழந்தைகளுக்கான சோப்பில்கூட பி.ஹெச் 7-9 என்ற அளவிலேயே உள்ளது.கிரேடு 1 சோப்பின் பி.ஹெச் 5.5 என்ற அளவில்தான் இருக்கும். சருமத்தின் பி.ஹெச்-க்கு சமநிலையில் இருக்கும் இந்த சோப்பைப் பயன்படுத்தலாம்.இந்த வகை சோப், சருமத்தில் உள்ள கிருமிகளை அகற்றும். எரிச்சல் தன்மையைக் குறைக்கும். ஈரப்பசையை நீண்ட நேரம் தக்கவைக்க உதவும். பி.ஹெச் 7-9 கொண்ட சோப்பை, ஐந்து நிமிடங்கள் வரை சருமத்தில் பூசிக் கழுவினால், மீண்டும் சருமம் பழைய நிலைக்கு மாற இரண்டு மணி நேரமாகும். சருமம் ஆல்கலினாக மாறிக்கொண்டே போகும். அமிலத்தன்மையும் காரத்தன்மையும் சமநிலையில் இருப்பதுதான் சரி.
கிரேடு 2, 3 சோப் தரம்:
கிரேடு 2, 3 சோப்பில் அதிக அளவு ரசாயனங்கள், எடையை அதிகரிக்க உதவும் பொருட்கள் (Hard substances) கலக்கப்பட்டிருக்கும். மேலும், இதன் சருமத்தைச் சுத்தம் செய்யும் திறன் குறைவாக இருக்கும். ஈரப்பசையைச் சருமத்தில் தக்க வைக்காது. நுரை குறைவாக வரும். மிக எளிதில் கரையக்கூடியதாக இருக்கும்.
சோப் பயன்படுத்துவது எப்படி?
சோப்பை சருமத்தில் நேரடியாகத் தேய்க்கக் கூடாது. கைகளில் சோப்பைத் தடவி, கைகளால் முகத்தை வட்டவடிவில் (Circular motion) மூன்று முறை சுற்றிக் கழுவுவதே சரி.சிலர் 2-5 நிமிடங்கள் வரை சோப்பை மீண்டும் மீண்டும் தேய்த்து முகம் கழுவுவார்கள். இது தவறான பழக்கம். இதனால், சருமம் நிச்சயம் பாதிக்கப்படும்.
எந்த சருமத்தினருக்கு எந்த சோப்/ஃபேஸ்வாஷ்?
வறண்ட சருமம் - பி.ஹெச் 5.5 சமநிலை கொண்ட சோப்கள் நல்லவை. சோப் கவரில் உள்ள தயாரிப்பு பட்டியலில் வெஜிடபிள் எண்ணெய், கோகோ பட்டர், ஜொஜோபா எண்ணெய், அவகேடோ, வைட்டமின் இ, கிளிசரின் போன்ற பொருட்கள் குறிப்பிட்டிருக்கும் சோப் மற்றும் ஃபேஸ்வாஷ் பயன்படுத்தலாம்.
எண்ணெய் மற்றும் பருக்கள் நிறைந்த சருமம் - மருத்துவர் ஆலோசனையுடன் சோப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.
எண்ணெய் சருமம் - தைம் (Thyme) எனும் மூலிகை கலந்த சோப் மற்றும் ஃபேஸ்வாஷ் நல்லவை. எண்ணெய் சருமத்தினர், இரண்டு முறைக்கு மேல் முகம் கழுவக் கூடாது. இதனால் முகப்பருக்கள் வரக்கூடும்.சென்சிட்டிவ் சருமம் - அதிக நறுமணங்கள் மற்றும் நிறங்கள் கொண்ட சோப்களைத் தவிர்க்க வேண்டும். பி.ஹெச் 5.5, அதிக டி.எப்.எம் அளவு கொண்ட சோப் மற்றும் ஃபேஸ்வாஷ் பயன்படுத்தலாம்.எண்ணெய் மற்றும் வறண்ட காம்பினேஷன் சருமம் - கிளிசரின் கலந்த சோப் மற்றும் பேஸ்வாஷ் பயன்படுத்தலாம்.
பாடிவாஷ்
வறண்ட சருமம் - சூரியகாந்தி, சோயா, ஓட்ஸ் கலந்த பாடிவாஷ் சிறந்தது.
எண்ணெய் மற்றும் பருக்கள் சருமம் - டீ ட்ரீ எண்ணெய் (Tea tree oil) உள்ளவற்றைப் பயன்படுத்தலாம்.
சென்சிட்டிவ்,சரும அலர்ஜி- மருத்துவர் ஆலோசனைப்படி பாடிவாஷ் பயன்படுத்துவது நல்லது.
#டாக்டர் விகடன் :ப்ரீத்தி
________________________________________________________________________
ஆரோக்கியமான சருமம் வேணுமா ?அரோமா ஆயில் ட்ரை பண்ணுங்க
எங்கு கிடைக்கும்?
அரோமா ஆயில் என்பது நறுமண எண்ணெய்களைக் குறிக்கும். இது வாசம்மிக்க மலர்கள் மற்றும் தாவரங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. இது, மெடிக்கல் ஷாப், நாட்டு மருந்துக் கடை மற்றும் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்.சருமத்தை மெருகேற்ற பார்லரைவிட கூடுதல் பலன் கொடுக்கக்கூடியது, அரோமா ஆயில்.அழுத்தமாகச் சொல்கிறார், சென்னை, ‘கேர் அண்ட் க்யூர்’ அரோமா கிளினிக்கின் நிர்வாகி கீதா அஷோக். அரோமா ஆயில் உதவியுடன் வீட்டிலேயே தேக வனப்பை மீட்கும் எளிய வழிகள் இதோ!
க்ளென்சிங்:
தினமும் முகத்தைக் கழுவும்போது, சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் சிறிதளவு எடுத்து நுரை வரும் அளவுக்கு கைகளில் தேய்த்துக்கொண்டதும் அந்த நுரையில் லெமன் கிராஸ் ஆயில் இரண்டு சொட்டு விட்டு முகத்தைக் கழுவவும்.
பலன்: சரும துவாரங்களில் அடைந்துள்ள அழுக்குகள் வெளியேறுவதுடன், அரோமா ஆயிலின் வாசனையானது, சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும்.
நீராவி பியூட்டி:
எண்ணெய் வடியும் சருமம் உள்ளவர்களுக்கான குறிப்பு இது. ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து அதில் பெப்பர் மின்ட் ஆயில், லாவெண்டர் ஆயில், மின்ட் ஆயில் தலா இரண்டு சொட்டுகள் விட்டு பாத்திரத்தை மூடி அடுப்பில் ஏற்றி கொதிக்கவிடவும். இதில் முகத்துக்கு நீராவி எடுக்கவும்.
பலன்: முகத்தில் சுரக்கும் அதிக எண்ணெய்ப் பசையை மட்டுப்படுத்துவதுடன், சருமத்தில் படிந்துள்ள அழுக்கை வெளியேற்றி பொலிவாக்கும்.
வறண்ட சருமத்தினருக்கும் இருக்கிறது அழகுக் குறிப்பு. ஒரு பாத்திரத்தில் நீரெடுத்து அதில் ஜெரேனியம் ஆயில் (geranium oil), லாவெண்டர் ஆயில், யலாங் யலாங் ஆயில் (ylang ylang oil) தலா இரண்டு சொட்டுகள் விட்டு, மூடிக் கொதிக்க விடவும். கொதித்த பின் நீராவி பிடிக்கவும்.
பலன்: முகத்தின் இறந்த செல்களை நீக்குவதுடன், சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்க உதவும்.
சரும அடுக்குகளில் ஊடுருவும் ஆயில்:
பொதுவாக பொலிவிழந்த சருமத்தை உடனடியாகப் பளிச்சென காட்டவும், அந்தப் பொலிவு அதிகபட்சம் மூன்று நாட்கள் நிலைக்கவும் ஃபேஸ்பேக் உதவி செய்யும். ஆனால் கரும்புள்ளி, பரு, மங்கு போன்ற சருமத்தின் இரண்டாவது அடுக்கின் பிரச்னைகளையும், சுருக்கம், கோடுகள், வயதான தோற்றம், சருமத் தளர்வு போன்ற சருமத்தின் மூன்றாவது அடுக்கின் பிரச்னைகளையும் சரிசெய்வது, அரோமா ஆயிலின் தனிச்சிறப்பு. இதற்கு, லாவெண்டர் ஆயில், லைம் ஆயில், பச்சோலி ஆயில், சீடர் வுட் ஆயில், யலாங் யலாங் ஆயில் இவற்றில் ஏதாவது இரண்டு ஆயில்களில் தலா இரண்டு சொட்டுகளை, ஃபேஸ்பேக் போடும் முன் அதில் கலந்து முகத்துக்கு அப்ளை செய்யவும்.
பலன்: அரோமா ஆயிலின் மூலக்கூறுகள் சருமத்தின் துவாரங்களைவிட மிகச்சிறியது. அதனால் ஃபேஸ்பேக் போட்ட 2 முதல் 20 விநாடிகளுக்குள் இந்த ஆயில் சருமத்தின் மூன்றாவது அடுக்குவரை ஊடுருவி சருமப் பிரச்னைகளைத் தீர்க்கும்.
நன்றி :அவள் விகடன்

பல் பராமரிப்பு..- கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
காலை, இரவு இரு நேரங்களிலும் பல்துலக்க வலியுறுத்தப்படுவதன் காரணம் என்ன?
பல் சொத்தையைத் தவிர்க்கவே அவ்வாறு வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் சாப்பிடும் உணவுப் பொருட்கள் பற்களுக்கு இடையே ஒட்டிக்கொள்ளும். மேலும், உணவுப்பொருட்களில் உள்ள சுக்ரோஸை (இனிப்பு) பாக்டீரியாக்கள் சாப்பிட்ட பின்னர், லாக்டிக் அமிலத்தை பல், ஈறுகளின் மீது வெளியிடும்போது, அது ஒரு வெண்படலம் போன்று உருமாறும். அந்தப் படலம் தொடர்ந்து படியும்போது, காரையாக (Plaque) மாறி, பல் அரிப்பு ஏற்பட்டு பல்லானது சொத்தையாகும்.
பல் துலக்கும்போது ரத்தம் வரக் காரணம்?
பற்களின் காரையை கவனிக்காமல் விட்டால், ஈறுகள் பலவீனம் அடைந்துவிடும். அதனால் பல் துலக்கும்போது, ஈறுகளில் ரத்தம் வரும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சிலருக்கும், பல் துலக்கும்போது ரத்தம் வரும். பற்களில் ரத்தம் வந்தால், ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவரை அணுக வேண்டும். பொதுவாக, ஆண்டுக்கு ஒரு முறையாவது பல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
குழந்தைகளுக்குப் பால் பற்கள் விழுந்து நிரந்தரப் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்..?
குழந்தைகள் வாயை திறந்துகொண்டே தூங்குவது, விரல் சூப்பிக்கொண்டே தூங்குவது, அடிக்கடி நாக்கு மற்றும் பென்சிலைக் கடித்துக்கொண்டே இருப்பது... இதெல்லாம் தவறு. இவ்வாறு செய்வதால் பால் பற்கள் விழுந்து நிரந்தரப் பற்கள் முளைக்கும் சமயத்தில் பற்கள் கோணலாகவும், சீரற்ற முறையிலும் வளர ஆரம்பிக்கும். பொதுவாக, குழந்தைகளுக்கு 7 - 12 வயதில் பால் பற்கள் விழுந்து, நிரந்தர பற்கள் முளைக்கும் சமயத்தில் குழந்தைகளின் பற்களை கவனமாகக் கண்காணிக்க வேண்டும். 12 வயதுவரை பற்கள் விழாமல் இருந்தால், கட்டாயம் மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை செய்ய வேண்டும்.
சூடான, குளிர்ச்சியான, கடினமான உணவுப் பொருட்களால் பற்களுக்கு ஏற்படும் பாதிப்பு..?
ஆரோக்கியமான பற்கள் குளிர்ச்சியான, சூடான, கடினமான பொருட்களை ஏற்றுக்கொள்ளும். சொல்லப்போனால் கடினமான உணவுகளை மென்று சாப்பிட பற்களுக்கு தொடர்ந்து வேலை கொடுக்கும்போது, அதன் வலிமை உறுதிபடும். அதனால்தான் கரும்பு சாப்பிடுவது பற்களின் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி வலியுறுத்தப்படுகிறது. சொத்தைப் பல் மற்றும் பல் ஈறுகளில் பாதிப்பு உடையவர்கள் குளிர்ச்சியான, சூடான பொருட்களைச் சாப்பிடும்போதுதான், பல் வலி மற்றும் பல் கூச்சம் ஏற்படும். அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
புகையிலைப் பொருட்கள், பற்களின் ஆரோக்கியத்தை பாழாக்குவது பற்றி?
தொடர்ந்து புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால், பற்களின் ஈறுகள் பாக்டீரியாக்களால் அரிக்கப்பட்டு, பல் சொத்தை, பல் வலி, பற்களில் கறை போன்ற பாதிப்புகள் ஏற்படும். மேலும், வாயினுள்ளே தொடர்ந்து புகையிலைப் பொருட்களை அடைத்து வைத்திருப்பதால் ‘ஓரல் கேன்சர்’ பாதிப்புக்கும் வாய்ப்பிருக்கிறது. புகையிலைப் பொருட்களை பயன்படுத்திய பின்னர், வாயை சுத்தம் செய்ய வேண்டும். படிப்படியாக புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதே நல்ல தீர்வு.
சூயிங்கம் மெல்வது நல்லதா?
சூயிங்கம் மெல்லும்போது பற்களுக்குத் தொடர்ந்து வேலை கொடுக்கப்படுவதுடன், உமிழ்நீரும் சுரந்து கொண்டே இருப்பதால் பற்களுக்கு வலிமையைத் தரும். எனவே, சூயிங்கம் மெல்வது பற்களுக்கு ஆரோக்கியமானதே.
குழந்தைகளுக்கு புட்டிப்பால் கொடுப்ப தால் பல் பிரச்னை வருமா..?
கண்டிப்பாக வரும். புட்டிப்பால் கொடுக்கும் பெரும்பாலான அம்மாக்கள், இரவு நேரங்களில் பால் பாட்டிலை குழந்தையின் வாயில் வைத்தபடியே தூங்கச் செய்கின்றனர். இதனால், குழந்தையின் பற்களில் பால் படிந்துவிடுகிறது. வாயில் எப்போதுமே இருக்கும் ‘ஸ்டிரெப்டோ காகஸ்’ (strepto coccus) பாக்டீரியா, பற்களில் படிந்திருக்கும் பாலுடன் வினைபுரிந்து பற்சொத்தையை ஏற்படுத்தும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் இத்தகைய பற்சொத்தை, ‘நர்ஸிங் பாட்டில் கேரீஸ்’ (Nursing bottle caries) எனப்படும். அம்மாக்கள், புட்டிகளின் மூலம் குழந்தைக்குப் பால் கொடுத்தவுடன், கவனமாக குழந்தையின் பல் மற்றும் நாக்குப் பகுதியை சுத்தம் செய்துவிட வேண்டும். அக்கால வழக்கத்தைப்போல சங்கு (பாலாடை) மூலமாக குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதே சிறந்த முறை.
சீரற்ற பல் வரிசையை சரிசெய்ய கிளிப் அணியும்போது, கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?
பற்களின் வரிசையை சீர்செய்ய, ‘ரிமூவபிள்’ மற்றும் ‘ஃபிக்ஸட்’ என இரண்டு வகையான கிளிப்கள் பயன்படுத்தப்படுகின்றன. சிறுவர்களுக்கு, ரிமூவபிள் வகை கிளிப்களைப் பயன்படுத்தலாம். விலை குறைவாக இருப்பதுடன் குறுகிய நாட்களிலேயே பற்களின் வரிசையை சீர் செய்துவிடலாம். 20 வயதுக்கு மேல் பல் வரிசையை சீர் செய்ய நினைத்தால், அதிகம் செலவாகும். மேலும், ‘ஃபிக்ஸட்’ வகை கிளிப்களைமட்டுமே அணிய முடியும்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.