Thursday, September 24, 2015

USB டாங்கிள் DATACARD connect ஆகாமல் மக்கர் செய்கிறதா ? இணையதளத்தை பயன்படுத்த இயலாமல் தடுமாற்றமா ?

கணினியில் பயன்படுத்தக்கூடிய யூ எஸ் பி டாங்கிள் ( dongle ) /data card deviceகளில் பெரும்பாலும் டெலிகாம் கம்பெனி வழங்கும் device  கொஞ்சம் பாதுகாப்பானது .ஆனால் நாமே சிம் பொருத்தி பயன்படுத்தும் manual டிவைஸ் சில நேரம் connect ஆகாமல் இருக்கும் . அதற்க்கு என்ன செய்யலாம் !!!
  • உங்களின் கணினியில் போர்ட் மாற்றுங்கள் அதாவது நீங்கள் பெண்டிரைவ் இன்சர்ட் செய்யும் பின்னில் இதை போடாமல் அருகில் இருக்கும் வேறு பின்னில் சொருகி மீண்டும் உங்கள் நெட் ஐ கனெக்ட் செய்து பாருங்கள் .
  • உங்களின் கணினியில் தேவையற்ற temporary files அதிகம் store ஆகி இருந்தாலும் இது போல பிரச்சனை வரும் அதற்க்கு உங்கள் கம்ப்யூட்டர் இல் Run option கிளிக் செய்து அதில் %temp% type பண்ணி , open செய்து ஸ்க்ரீனில் வரும் தேவையற்ற files ஐ delete செய்யுங்கள் . மீண்டும் நெட் connect செய்து பாருங்கள்
  • உங்களின் connect dailogbox  இல் போர்ட் காண்பிக்காமல் error என்று காட்டுகிறதா ?நீங்கள் சிம் போட்டு யூ எஸ் பி பயன்படுத்துபவர் என்றால் அதை கழட்டி மீண்டும் சரியாய் போட்டு பயன்படுத்தி பாருங்கள்
  • நீங்கள் சிஸ்டம் இல் அதிகமான  பழைய software நிறைத்து வைத்திருந்தால் சில நேரம் நெட் connect செய்ய இல்லாமல் ஹேங் ஆகும் எனவே அதை சீர் செய்துவிட்டு மீண்டும் முயற்ச்சியுங்க
  • சில நேரம்  யூ எஸ் பி இன்ஸ்டால் செய்தது சரியாய் இருக்காது எனவே சரியாய் மீண்டும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி பாருங்க
  • உங்களின் யூ எஸ் பி சாப்ட்வேர் ஒருவேளை lastest updation ஆகாமல் இருந்தால் அதை கம்பெனி வலைப்பக்கத்தில் இருந்து புதிதாய் உங்க device க்கு பொருந்துவதை தரவிரக்கம் செய்து பயன்படுத்தி பாருங்க
  • நீங்கள் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்தும் connect ஆகவில்லை என்றால் கம்ப்யூட்டர் ஐ shutdown செய்து திரும்பவும் restart செய்து முயற்சிக்கவும்
  • நெட்வொர்க் சிக்னல் சரியாய் இருக்கிறதா என்று சரி பார்த்து கொள்ளுங்கள்
  • மேலும் பிரச்சனை தொடர்ந்தால் வேறு ஒரு கணினியில் உங்கள் device இயங்குதா என்று செக் செய்க
  • சில நேரம் யூ எஸ் பி பின் பழுதாகி இருந்தாலும் இது போல பிரச்சனைகள் ஆகும்
  • சில நேரம் நெட்வொர்க் error ஆகவும் இருக்கும் ஏதேனும் நெட்வொர்க் இல் பழுது ஏற்பட்டிருந்தால் இது போன்ற பிரச்சனை வரும் ,நீங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு இது பற்றி தெரிவிதால் அவர்கள் இதை சரி செய்து விடுவார்கள் .
  • எப்போதும் நெட்வொர்க் சிக்னல் நன்றாய் கிடைக்கும் டாங்கிள் / datacard பயன்படுத்துங்க , மேலும் slow நெட் ஸ்பீட் இருந்தால் பல நேரம் operator மட்டும் அல்ல நமது கணினியே கூட அதிகமான மென்பொருள் அழுத்தம் காரணமாய் இப்படி செய்ய கூடும் அடிக்கடி சரி பார்த்து கொள்ளுங்கள் .


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.