கார் சர்வீஸ் பிசினஸ் :
இரண்டு சக்கர வாகனத்துக்கு இணையாக கார்களின் தேவை இன்று அதிகரித்துள்ளது. கார் வாங்குவதற்கு எளிதாகக் கடன் கிடைப்பது இதற்கு ஒரு முக்கியமான காரணம் ஆகும். அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் கார்களின் எண்ணிக்கை 40 - 45 கோடியாக உயர வாய்ப்புள்ளது. தற்போது 7 கோடி கார்கள் உள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் உலகின் 5-வது மிகப் பெரிய கன்ஸ்யூமர் நாடாக இந்தியா மாறும். வேகமாக வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே, கார் பராமரிப்பு என்பது அவசியமான ஒன்றாக மாறி உள்ளது.ஒரேநேரத்தில் அதிகபட்சமாக ஐந்து கார்களை வாஷ் செய்யவும், மூன்று கார்களை பார்க் செய்யும் அளவுக்குக் கட்டாயம் இடம் தேவை. மேலும், இந்தத் தொழிலில் தொடர் செலவுகள் என்பது கிடையாது. அதாவது, பணியாளர்களின் சம்பளம் மற்றும் வாஷிங் செய்வதற்கு தேவையான பொருட்களைத் தவிர்த்து வேறு செலவு கிடையாது.மழைக் காலத்தில் மட்டும் கார்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. அதிக லாபம் தரக்கூடிய தொழில் இது. வாடிக்கையாளரின் தேவை என்ன என்பதைத் தெரிந்து சேவைசெய்வது முக்கியம்
தேவையான இயந்திரம்: பிரஷ், ஜெட் ஸ்பிரே, உலர்த்தும் இயந்திரம், சென்சர், கன்ட்ரோலர், பம்ப், டைர்வ்ஸ், நாசில் போன்றவை.
தொழில் வாய்ப்பு: வளர்ச்சி அடையும் அனைத்துப் பகுதிகளும்.
வரிக்குப் பின் வருமானம்: 30% கிடைக்கும்.
தேவைப்படும் முதலீடுகள் பற்றிய விவரம் :
தொழில் துவங்க தேவைப்படும் மொத்த முதலீடு :22லட்சம்
இயந்திரங்கள் வாங்கும் செலவு : 15லட்சம்
தொழில் துவங்கும் முன்னே செலவுகள் :1 லட்சம்
செயல்பாட்டு மூலதனம் : 1லட்சம்
தொழில் நடக்கும் இடம் கட்டிடம் வாடகை :5லட்சம் , மேலும் 1000 சதுரடி இடம் தேவை
இதற்க்கு நிதி ஆதாரம் கிடைக்குமா ?
கிடைக்கும் மானியம் : 3.75 லட்சம்
நாம் போடும் மூலதனம் : 7.75லட்சம்
வங்கி கடன் : 10.50லட்சம்.
என்இஇடி(New Entrepreneurship Cum Enterprise Development Scheme (NEEDS) என்ற திட்டத்தின் கீழ் இயந்திரம் வாங்கும் மதிப்பில் 25% மானியம் கிடைக்கும்.
நன்றி : நாணயம் விகடன்