உலகத்தில் பிரமலமான பணக்காரர் என்றால் நாம் பில்கேட்ஸ் என்போம் இவரை பற்றி நாம் அறியாத சில விஷயங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்
- வாஷிங்க்டன் ஸீட்டில் இல் பில்கேட்ஸ் Oct. 28, 1955 அன்று பெற்றோரில் ஒருவர் வழக்கறிஞர் ஆகவும் இன்னொருவோர் ஆசிரியர் ஆகவும் இருந்த தம்பதிக்கு பிறந்தார் .இவர் ஒரு நன்றாய் வழக்காடும் சிறுவனாகவும் அறிவுள்ள பிள்ளையாகவும் இருந்தாராம் ,மேலும் இவர் அதிகமாய் அறிவை பெருக்கி கொள்ளும் வாஞ்சை உடையவராய் இருந்தாராம் . தனது இளம் பிராயத்தில் உலக என்சய்களோ பீடியாவின் பாகங்கள் முதலில் இருந்து கடைசி வரையிலும் அத்தனை பாகங்களையும் படித்து முடித்து விட்டாராம் , புத்தகங்கள் படிப்பது இவருக்கு பிரியம் இப்போதும் இவர் வீட்டில் ஒரு பெரிய புத்தக லைப்ரரி உண்டு .
- இவர் ஹர்ட்வர்ட் பல்கலைகழகத்தில் இருந்து பாதியில் படிப்பை முடித்திராமல் வெளியேறினார் இருப்பினும் அதே பல்கலைக்கழகம் 2007 இல் இவருக்கு உயர்ந்த மரியாதைக்கு உரிய டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. மேலும் இவர் பட்டம் அழைப்பு விழாவிற்க்கு அங்கே சிறப்பு விருந்தினராய் அழைக்கபட்டு இருந்தார் அப்போது அவர் கூறியது " நான் ஒரு தவறான உதாரணம் அதுதான் பட்டம் அழைப்பு விழாவிற்கு அழைக்க பட்டு இருக்கிறேன் ஒருவேளை நான் கல்லூரி படிப்பின் ஆரம்ப விழாவிற்க்கு அழைக்கபட்டு இருந்தால் அப்போது நான் பேசி இருந்தால் இங்கே பட்டம் வாங்க மிக குறைவானவர்களே இருந்திருப்பீர்கள் " என்று கூறினாராம் .
- எத்தனையோ எதிர்ப்புகள் சோர்வுகள் போரட்டங்கள் இத்தனையையும் தாண்டி 1985 இல் mircosoft வெளியிட பட்டது 1986 இல் சந்தைக்கு வந்தது 1987 இல் 31 வயதான இவர் பணக்காரரும் பில்லியனர்ரும் ஆனார்
- சிறு வயதில் ஒருமுறை லைசென்ஸ் இன்றி கார் ஒட்டி ,தப்பி ஓட முயன்றதற்க்காய் கைது செய்யப்பட்டு இருக்கிறார் .
- ஒருவேளை microsoft முயற்சி தோற்று இருந்தால் இவர் artificial intelligence researcher ஆகி இருப்பாராம் அதில் அவருக்கு ஆர்வம் உள்ளதாம் டென்னிஸ் விளையாடுவது அவருக்கு பிடித்தமான ஹாபி , மேலும் கார்கள் ஓட்டுவது அவருக்கு பிரியம் அவரது வீட்டில் ஏறக்குறைய 23 கார்கள் நிறுத்தும் அளவுக்கு பெரிய கரேஜ் உண்டு
- Warren Buffet வாரேன் பப்பெட் (இவரும் உலகின் பிரபலமான கோடிஸ்வரர் ) இவரும் பில்கேட்ஸ்ம் நல்ல நண்பர்கள் 1990's ஆண்டுகளில் இவர் தனது மனைவியை (மெலிண்டாவை )மனம் முடிக்க ப்ரொபோஸ் செய்ய நினைத்த பொழுது வாரேன் பப்பெட் தான் அதற்கான மோதிரத்தை தேர்வு செய்து கொடுத்தாராம் . ஆரம்பத்தில் மெலிண்டா mircosoft நிறுவனத்தில் பணிபுரிந்தவர் . இவர்களுக்கு தற்பொழுது 3 பிள்ளைகள் உள்ளனர்
- மேலும் இவருடைய பிள்ளைகளில் ஒவ்வொருவருக்கும் 10 மில்லியன் தான் சொத்துக்கள் கொடுப்பாராம் ,ஏராளமான பில்லியன் கணக்கில் வைத்திருக்கும் இவர் அதில் ஒரு சதவிகிதம் கூட இல்லை . பில்கேட்ஸ் தனது பிள்ளைகளுக்கு நிறைய பணத்தை ஒரு தகப்பனாய் கொடுப்பது என்பது அவர்களுக்கு நன்மையானது அல்ல என்றும் கூறி இருக்கிறார் . மேலும் தனது பிள்ளைகளுக்கு எலெக்ட்ரிக் பிளான்ட்ஸ்க்கு கூட்டி சென்று நேரில் நிறைய விஷயம் கற்றுதருவாராம் அது அவர்களுக்கும் விருப்பமாம் .
நிறைய சம்பாதித்தாலும் நிறைய சொத்துக்கள் சேர்த்தாலும் இவர் உலகம் எங்கும் நிறைய சேவைகள் செய்து வருகிறார் , ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டம் மூலம் பலருக்கு உணவளித்து உதவிகள் செய்து வருகிறார் அவரின் foundation மூலமாய் . என்பது உண்மையில் பாராட்டவேண்டிய விஷயம் .

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.