பீனிக்ஸ்-அக்கினி பறவை : The Bird of fire (mythology)
நிஜத்தில் இப்படி ஒரு பறவை உயிருடன் இருக்கிறதா ?அது நெருப்பில் போட்டாலும் மீண்டும் எழுந்து பறக்குமாமே அப்படியா ?சீன மக்களும் விரும்பும் ஒரு பறவையாம் ! எகிப்தில் சூரியனுக்கான கோவிலில் இது இன்னமும் வசிக்கிறதாம் , அப்போ அதற்க்கு மரணமே இல்லையா ??? எப்படி சாத்தியம் !!!
பதிலை படியுங்க நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் :)
பலஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே உலகில் ஒரே ஒரு பறவை தங்க மயமான சிவப்பு நிறத்தில் ஜொலிஜொலிக்க கூடிய இறகுகள் உடையதாய் இருந்ததாம் அதன் வாலின் பகுதிகளில் பளுப்பும் நீளமும் ஆனா வண்ண மயமான நீளம் உள்ள இறகுகளும் உண்டாம் அது அரேபியாவில் வசித்ததாம் ,மிக மிக மிக உயரமாய் தான் பறக்குமாம் அதினால் மனிதரில் எவரும் இதை காண முடியாதம் (இது உயர்வையும் ,வலிமையையும் ,வெற்றியையும் ) குறிக்கும் ஒரு பறவை என்றும் மக்களால் நம்ப பட்டதாம் ,இதன் வாழ்நாளில் ஒரு முறை கூட இதன் கால்கள் தரையில் பட்டதே கிடையாதாம் .
கழுகுகளை காட்டிலும் பெரிதாயும் காணப்பட்டதாம் . அது முட்டை இடாதாம் மேலும் ஒரு பறவை 500 ஆண்டுகள் வரை வாழுமாம் . "பீனிக்ஸ்" இது ஒரு பழங்கால நம்பிக்கை ஒரு கதை என்று கூறப்படுகிறது . இந்த பறவையின் அழகை கண்டு சூரியன் வியந்து நீ என்னுடன் இரு ஜொலித்து கொண்டே இருப்பாய் என்றும் கூறினதாம் இதனால் இந்த பறவை சூரியன் உதிக்கும் கிழக்கு திசை நோக்கி பறந்ததாம் அங்கு காடுகள் மேடுகள் பள்ளங்கள் தாண்டி ஒரு பாலைவனத்தில் இளைபாறின சில காலம் அங்கு தங்கிய பொழுதில் அது வயதான தனது நிலையை உணர்ந்ததாம் சூரியனை நோக்கி தன்னை மீண்டும் இளமை ஆக்கிட வேண்டி அழகாய் பாடல் பாடியதாம் அதனிடம் இருந்து பதிலே வராமல் போகவே காத்திருந்து காத்திருந்து சோர்ந்து தான் முன் வசித்த இடத்திற்கே போகலாம் என்று திரும்பியதாம் வழியில் இலவங்க பட்டைகள் ,உயர்ந்த வாசனை திரவியத்தின் இலைகள் எல்லாத்தையும் சேகரித்து கொண்டுவந்து ஒரு உயர்ந்த பனை மரத்தில்இலவங்க பட்டைகளால் கூடு செய்து ,அதனை அந்த வாசனை மூலிகைகள் கொண்டு அலங்கரித்ததாம் பின் அதில் ஒரு நல்ல வாசனையுடைய ஒரு வகை myrrh, என்னும் பிசினை சேகரித்து அதில் பந்து போல முட்டை வடிவில் உருவாக்கி அதன் மீது அமர்ந்து சூரியனை நோக்கி பாடல் பாட சூரியன் வெளிபட்டதாம் கதிர் ஓளி இறகுகள் மீது பிரகாசித்த உடனே இந்த பறவையில் நெருப்பு பற்றிக்கொண்டதாம் தன்னை தானே இது எரித்து கொண்டதாம் , இது மாத்திரம் எரிந்து வெள்ளி நிற சாம்பல் நிறத்தில் சாம்பல்கள் குவியலாய் இருக்க அடியில் இருந்த அது முன்னே பிசினால் செய்து வைத்த முட்டையில் இருந்து ஒரு சிறு பீனிக்ஸ் பறவை சிவப்பும் தங்கமயமும் ஆனா ஜொலிஜொலிக்கும் நிறத்துடன் சாம்பலில் இருந்து பறந்ததாம் அதுவும் 500 வருடங்கள் வாழும் என்றும் மீண்டும் இது போன்ற சுழற்சி நடக்கும் என்றும் கதைகள் உண்டு அதுதான் பீனிக்ஸ் நெருப்பு பறவை என்பார்கள்மேலும் இந்த பறவை உயிர்தேழுதலையும் மீண்டும் தன்னை நிலைப்படுத்தி முன்னிருந்த நிலைக்கு திரும்புவதையும் குறிக்கும் விதமாய் உள்ளதாம் மேலும் இந்த பறவைக்கு உலகில் உள்ள தேசங்களில் பல்வேறு பெயர்களை கொண்டு அழைக்கபடுகிறது இந்த பறவையின் தன்மையையும் பெயரையும் கொண்டு ஆங்கிலத்தில் idiom கூட உண்டு "To rise like a phoenix from the ashes" என்று மீண்டும் எழுவதை குறித்திடும் விதமாய் ஆயினும் நிஜத்தில் இது ஒரு கதையால் நம்பப்படும் விஷயம் மாத்திரமே .

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.