சீனாவில் வளர்க்கப்படும் செல்லமான பூச்சி கிரிகெட் பற்றி தெரியுமா ?
1000 ஆண்டுகளாய் பாரம்பரியமாய் சீனாவில் வளர்ப்பு பிராணி உண்டு அது என்னன்னு தெரியுமா? கிரிக்கெட் பூச்சி,அங்கே கிரிகெட் பூச்சிகள் சீனாவில் சிறுவர்களின் செல்ல பிராணிகளாம் . இதை வைத்து நம்ம ஊரு சேவல் சண்டையை போல வீர விளையாட்டு கிரிகெட் fighting நடத்துவார்களாம் அதுவும் தேசிய அளவில் சிறந்த பூச்சிகள் தேர்வு செய்ய பட்டு இதற்கான ஜட்ஜ் -களால் அதன் இடை எல்லாம் கணக்கிட பட்டு களத்தில் இறக்கி விடப்படும் மேலும் இதன் மீது பந்தைய பணம் கூட வெற்றி பெற ஒரு பூச்சியின் மீது கட்டுவாங்கலாம் .இது ஒரு பாரம்பரிய பூச்சி சண்டை .
மேலும் கையில் ஒரு ஸ்ட்ரா எடுத்து அதன் மூலம் இந்த பூச்சிக்கு ட்ரைனிங் கொடுக்கறாங்க சண்டை போட களத்தில் நிறுத்தி ஒரு மெல்லிய குச்சியால் இவைகளை சண்டையை துவங்க சொல்லி சீண்ட ஆட்டம் ஆரம்பம் பின் ஜெயிக்கும் பூச்சி கோப்பையை வெல்கிறது . சரி இந்த பூச்சியை எங்கே வாங்குவாங்க ? வேறெங்கே சீனாவின் பீஜிங் மார்க்கெட் சந்தையில் தான் சிறு சிறு கூண்டுகளில் இவைகள் விற்பனை செய்ய படுகிறது . கொஞ்சம் புதுமையா இருக்குல ??? பூச்சி எல்லாம் அவார்ட் வாங்குதுன்ன பாருங்களே .
சரி இதுக்கு ஏன் கிரிகெட் பூச்சின்னு தெரியுமா ? சீனர்கள் கிரிகெட் பூச்சிகள் ஒருபொழுதும் தோல்வியை ஒப்புகொள்ளாதுன்னும் உற்சாகத்தை விடாமல் முயற்சித்து போராடும் என்பதால் விடா முயற்சியின் அடையாளமாய் கிரிகெட் பூச்சிகளை பாரம்பரிய விளையாட்டின் ஹீரோவாக வெச்சுருக்காங்க ...
கிரிகெட் பூச்சி சம்பியன்ஸ் சுவாரஸியம் தான் .

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.